அரசாங்கத்தை கவிழ்க்க சதி செய்ததாக குற்றச்சாட்டு ஹாங்காங் ஜனநாயக ஆர்வலர்கள் 45 பேருக்கு 10 ஆண்டு சிறை

1 month ago 4

ஹாங்காங் : இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தில் இருந்து ஹாங்காங் விடுவிக்கப்பட்ட பின்னர் கடந்த 1997ம் ஆண்டு சீனாவின் நிர்வாக பகுதிகளில் ஒன்றாக ஹாங்காங் மாறியது. சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்தாலும் ஹாங்காங் நாட்டுக்கென தனி கரன்சி, அரசியலமைப்பு சட்டங்கள் உள்ளன. கொரோனா தொற்று சூழலை பயன்படுத்தி தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீனா கொண்டு வந்தது. கடந்த 2020ம் ஆண்டு ஜூலை மாதம் அதிகாரபூர்வமற்ற தேர்தலை ஜனநாயக செயல்பாட்டாளர்கள் நடத்தினர். இதில் வெற்றி பெறுவோர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் தேர்தலுக்கு முன்னேறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த தேர்தலில் ஆறு லட்சத்துக்கும் அதிகமானோர் வாக்களித்தனர்.

இந்த நடவடிக்கை ஹாங்காங் அரசை முடக்கும் செயல் என ஹாங்காங் அரசு தெரிவித்தது. இதை சீனாவும் எதிர்த்தது. இதையடுத்து அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சி செய்த குற்றச்சாட்டில் ஹாங்காங்கின் முன்னாள் சட்டமியற்றுபவர்கள் மற்றும் ஜனநாயக செயற்பாட்டாளர் லியுங் குவாக்-ஹங், ஹெலினா வோங், பென்னி டாய்க் உள்பட 47 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர். அவர்களில் இருவர் நடப்பாண்டு தொடக்கத்தில் விடுதலை செய்யப்பட்டனர். மீதமிருந்த 45 பேருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

The post அரசாங்கத்தை கவிழ்க்க சதி செய்ததாக குற்றச்சாட்டு ஹாங்காங் ஜனநாயக ஆர்வலர்கள் 45 பேருக்கு 10 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Read Entire Article