அரசமைப்பு நாள் என்பது இந்தியாவில் இருக்கும் ஒவ்வொருவருக்குமான பெருமையான நாள்: பிரேமலதா பெருமிதம்!

2 months ago 9

சென்னை: அரசமைப்பு நாள் என்பது இந்தியாவில் இருக்கும் ஒவ்வொருவருக்குமான பெருமையான நாள் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பெருமிதம் தெரிவித்துள்ளார். அரசமைப்பு நாளை நினைத்து போற்றுவோம், வணங்குவோம் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது; 75வது வருடத்தின் அரசியல் அமைப்பு நாள் இன்று (26.11.2024), மன்னர் ஆட்சி முடிந்து, மக்களாட்சி தொடங்கி மக்களுக்காக ஒரு சட்டம் இயற்றப்பட்டு, அரசியல் அமைப்பாக உருவாகி 75 ஆண்டுக் காலமாகிறது.

பெரும் மக்கள் தொகை கொண்ட பல மொழிகளும், பல சாதி, மதத்தினரும் இணைந்து இருக்கின்ற நமது இந்தியாவில் அனைவருக்குமான ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற முறையில் இந்த அரசியல் அமைப்பு, 75 ஆண்டு காலத்திற்கு முன்பே தொலைநோக்கு பார்வையோடு மிகவும் நியர்த்தியோடும், திறனோடும், கட்டமைக்கப்பட்ட நமது அரசியல் அமைப்பு நாள் என்பது இந்தியாவில் இருக்கும் ஒவ்வொருவருக்குமான பெருமையான நாள் ஆகும்.

மேலும் அடிமைத்தனத்திலிருந்து நாட்டை மீட்டெடுத்து, அனைவருக்கும் சுதந்திரத்தையும் வழங்கி, வாக்குரிமையும் வழங்கி, மக்களாட்சி தத்துவத்தைக் கொண்டு வந்து, தத்துவத்தின் மூலம் அரசமைப்பு நாளாக, சட்டத்தின் ரீதியாக இந்த நாள் உருவானது அனைவருக்கும் பெருமை. எனவே ஒவ்வொரு இந்தியரும் இந்த நாளை நினைத்து போற்றுவோம்! வணங்குவோம்! என்று பதிவிட்டுள்ளார்.

 

The post அரசமைப்பு நாள் என்பது இந்தியாவில் இருக்கும் ஒவ்வொருவருக்குமான பெருமையான நாள்: பிரேமலதா பெருமிதம்! appeared first on Dinakaran.

Read Entire Article