அரக்கோணம்: ரெயிலில் இருந்து தவறி விழுந்து இளைஞர் உயிரிழப்பு

1 month ago 10

ஆம்பூரை சேர்ந்தவர் பிரேம் (வயது 26) . இவர் தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக ஆம்பூரில் ரெயில் நிலையத்தில் இருந்து கோவை - சென்னை இன்டர்சிட்டி ரெயிலில் இன்று காலை தனது உறவினர்களுடன் ஏறினார்.

இந்த ரெயில் இன்று மதியம் அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு வந்தடைந்தது. அப்போது பிரேம் மற்றும் அவரது உறவினர்கள் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இறங்கினர்.

சற்று தூரம் சென்றபோது உறவினர் ஒருவர் தனது பையை அங்கேயே விட்டு விட்டதாக தெரிவித்தார். அப்போது ரெயில் புறப்பட தொடங்கியது.

தவறவிட்ட பையை எப்படியாவது எடுத்தே ஆக வேண்டும் என முடிவு செய்து செல்லும் ரெயிலில் ஏற முயற்சித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதனைக்கண்ட பயணிகள் மற்றும் நிலையத்தில் இருந்த அனைவரும் அலற ரெயில் ஓட்டுநர் ரெயிலை நிறுத்தினார்.

இந்த நிலையில் ரெயிலின் அடியில் சென்று பார்க்கும் போது அவர் ரெயிலின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

இந்த விபத்து காரணமாக, கோவை - சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக தாமதம் ஏற்பட்டது.

Read Entire Article