அரக்கோணம் பாலியல் புகார்: தி.மு.க. முன்னாள் நிர்வாகிக்கு முன்ஜாமீன்- ஐகோர்ட்டு உத்தரவு

7 hours ago 2

சென்னை,

அரக்கோணம் ஒன்றிய தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்து வந்த தெய்வச்செயல்(வயது 37) என்பவர், தன்னை திருமணம் செய்து கொண்டு வன்கொடுமை செய்து விட்டதாக கல்லூரி மாணவி ஒருவர் குற்றம்சாட்டினார்.

மேலும், தன்னை போலவே 20 இளம்பெண்களை ஏமாற்றியதாகவும் புகார் கூறினார். இதைத்தொடர்ந்து தெய்வச்செயல், அவரது மனைவி கனிமொழி(35) ஆகியோர் மீது அரக்கோணம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இதைத்தொடர்ந்து,தெய்வச்செயல் ஒன்றிய தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இந்தநிலையில், தெய்வச்செயல் முன்ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், 'அ.தி.மு.க.வினரின் தூண்டுதல் காரணமாக என் மீது தவறான தகவல்களுடன் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அரசியலில் எனக்கு இருந்து வரும் நற்பெயரை கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சமூகவலைதளத்தில் தவறான குற்றச்சாட்டை புகார்தாரர் கூறி உள்ளார்.

இந்த விவகாரம் திருமண சம்பந்தப்பட்டது என்பதால் காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே, எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்' என கூறியிருந்தார்.இதேபோன்று அவரது மனைவி கனிமொழி என்பவரும் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி செந்தில்குமார், இருவருக்கும் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Read Entire Article