அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் போல்ட் நட்டுகள் அகற்றம் : ரயிலை கவிழ்க்க சதியா என போலீசார் சந்தேகம்!!

5 hours ago 2

அரக்கோணம் : அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் போல்ட் கழற்றப்பட்டு இருந்ததால் ரயிலை கவிழ்க்க சதியா என போலீசார் விசாரித்து வருகின்றனர். திருவலங்காடு ரயில் நிலையம் அருகே சென்னையில் இருந்து அரக்கோணம் செல்லக்கூடிய மார்க்கத்தில் சிக்னல் இணைப்புகளை இணைக்கும் பகுதியில் போல்ட் கழற்றப்பட்டு இருந்ததை லைன்மேன் பார்த்துள்ளார். இது குறித்து உடனடியாக அவர் தகவல் தெரிவித்ததால் உரிய நேரத்தில் சிக்னல் கட் செய்யப்பட்டு பெரும் அசாம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

ரயில் தண்டவாள இணைப்புப் பகுதியில் போல்ட்நட்டுகளை அகற்றியவர் குறித்து ரயில்வே போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே அதிகாரிகள் தண்டவாள இணைப்புப் பகுதியில் போல்ட்நட்டுகளை அகற்றி ரயிலை கவிழ்க்க சதியா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போல் கடந்த ஆண்டு கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே தண்டவாளம் போல்ட் கழற்றப்பட்டதால் ரயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

The post அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் போல்ட் நட்டுகள் அகற்றம் : ரயிலை கவிழ்க்க சதியா என போலீசார் சந்தேகம்!! appeared first on Dinakaran.

Read Entire Article