டெல்லி: ஜம்மு – காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த செவ்வாய் கிழமை நடந்த தீவிரவாத தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த கொடூரத்தை அரகேற்றி விட்டு தப்பிய பயங்கரவாதிகளை அடையாளம் கண்டு அவர்களை பிடிக்க தேடுதல் பணி தொடர்ந்து வருகிறது. இதனிடையே பஹல்காம் தாக்குதலின் எல்லை தாண்டிய பயங்கரவாத தொடர்புகளை கருத்தில் கொண்டு பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது இந்தியா. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானும் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது. தங்களது முப்படைகளையும் தயாராக இருக்குமாறு இந்தியா அறிவித்ததை தொடர்ந்து, பாகிஸ்தானும் ராணுவத்தை தயார் நிலையில் வைத்திருக்கிறது.
இந்த நேரத்தில் இரு நாடுகளின் ராணுவ பலம் குறித்த விவரங்கள் பின்வருமாறு;
மக்கள் தொகை
இந்தியாவின் மக்கள் தொகை 140 கோடியே 91 லட்சமாக இருக்கிறது. பாகிஸ்தானின் மக்கள் தொகை 25 கோடியே 23 லட்சமாக இருக்கிறது. ராணுவ பலத்தில் உலக அளவில் இந்தியா 4வது இடத்தில் இருக்க, பாகிஸ்தான் 12வது இடத்தில் இருக்கிறது.
ராணுவ வீரர்கள்
இந்தியா 21 லட்சத்து 87 ஆயிரம் ராணுவ வீரர்களை கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் 12 லட்சத்து 11 ஆயிரம் வீரர்களை கொண்டிருக்கிறது.
துணை ராணுவப்படை
இந்தியாவில் 25 லட்சம் பேர் இருக்கின்றனர். பாகிஸ்தானில் 5 லட்சம் வீரர்கள் மட்டுமே இருக்கின்றனர். இதில் பாகிஸ்தானைவிட, இந்தியாவில் 20 லட்சம் வீரர்கள் அதிகம் இருக்கின்றனர்.
இந்திய கடற்படை
இந்திய கடற்படையில் 1 லட்சத்து 42 ஆயிரம் வீரர்களும், பாகிஸ்தான் கடற்படையில் 1 லட்சத்து 24 ஆயிரம் வீரர்களும் இருக்கின்றனர்.
இந்திய விமானப்படை
இந்திய விமானப்படையில் 3 லட்சத்து 10 ஆயிரம் வீரர்கள் இருக்கின்றனர். பாகிஸ்தானில் 78 ஆயிரம் விமானப்படை வீரர்கள் இருக்கின்றனர்.
விமானங்களின் வலு
இந்தியாவில் 2,229 விமானங்கள் இருக்கின்றன. பாகிஸ்தானில் 1,399 விமானங்கள் இருக்கின்றன.
போர் விமானங்கள்
இந்தியாவில் 513 போர் விமானங்கள் இருக்க, பாகிஸ்தானில் 328 இருக்கின்றன.
ராணுவ ஹெலிகாப்டர்
இந்தியாவில் 899 ராணுவ ஹெலிகாப்டர்கள் இருக்க, பாகிஸ்தானில் 373 ஹெலிகாப்டர்கள் உள்ளன.
ராணுவ தாக்குதல் ஹெலிகாப்டர்
இந்தியாவில் 80 தாக்குதல் ஹெலிகாப்டர்களும், பாகிஸ்தானில் 57 தாக்குதல் ஹெலிகாப்டர்களும் இருக்கின்றன.
போருக்கு பயன்படும் கவச வாகனம்
இந்தியா 1 லட்சத்து 48 ஆயிரம் வாகனங்களை வைத்திருக்கிறது. பாகிஸ்தான் 17 ஆயிரம் கவச வாகனங்களை வைத்திருக்கிறது.
பீரங்கி வண்டிகள்
இந்தியா 4 ஆயிரத்து 201 பீரங்கி வண்டிகளை வைத்திருக்க, பாகிஸ்தான் 2,627 பீரங்கிகளை வைத்திருக்கிறது.
நீர்மூழ்கி கப்பல்கள்
இந்தியா 18 நீர்மூழ்கி கப்பல்களையும், பாகிஸ்தான் 8 கப்பல்கள் வைத்திருக்கிறது.
மனித வளம் மற்றும் போர் உபகரணங்களில் பாகிஸ்தானை விட இந்தியாவை வலுவான நிலையில் இருக்கிறது. இத்தனையும் தாண்டி பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் பல உலக நாடுகள் இந்தியாவுக்கு நேசக்கரம் நீட்டியுள்ளன. அமெரிக்கா, ரஷ்யா, ஈராக் உள்ளிட்ட பல நாடுகள் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. அமைதிக்கு வழிவகுக்கும் வகையில் இரு நாடுகளுக்கு இடையேயான பல ஒப்பந்தங்கள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
The post ராணுவ பலம் யாருக்கு அதிகம்?.. இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம்: நேசக்கரம் நீட்டும் உலக நாடுகள்!! appeared first on Dinakaran.