அம்பை, டிச.10: அம்பை நகர காங்கிரஸ் சார்பில் சோனியாகாந்தி பிறந்தநாளை முன்னிட்டு அகஸ்தீஸ்வரர் கோயில் சமுதாய மண்டபத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் நகர காங்கிரஸ் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் வி.பி.துரை அன்னதானத்தை தொடங்கி வைத்தார். இதையடுத்து கல்யாணி திரையரங்கம் அருகே பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கல்லிடைக்குறிச்சி நகர தலைவர் கைக்கொண்டான், அம்பை நகர துணைத்தலைவர் இருதயராஜ், நிர்வாகிகள் ஜான் சவரிமுத்து, ஜார்ஜ் ஜெயராஜ், சம்பத் சீனிவாசன், வள்ளிகண்ணு, வனக்குமார், ஆறுமுகம், காளிராஜன், சிவாஜி செல்லப்பா, குத்தாலம் குருநாதன், ஞானசேகர், மாரியப்பன், அருணாசலம், ஸ்டீபன், பாலசுப்பிரமணியன், நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post அம்பையில் சோனியா காந்தி பிறந்த நாள் விழா appeared first on Dinakaran.