அம்பேத்கர் பிறந்தநாள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

5 days ago 6

அம்பேத்கரின் 135-வது பிறந்தநாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14-ந்தேதி சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்தார். அங்கு உள்ள அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ள அவரது படத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த விழாவில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் பி.கே. சேகர்பாபு, சாமிநாதன், தி.மு.க. எம்.பி. ஆ. ராசா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Read Entire Article