அம்பேத்கர் சிலைக்கு த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை

5 days ago 3

அம்பேத்கரின் 135-வது பிறந்தநாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14-ந்தேதி சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களில் ஒருவரான அம்பேத்கரின் பிறந்தநாளை தமிழ்நாடு முழுவதும் கட்சியினர் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை பாலவாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Read Entire Article