அம்பேத்கர் குறித்து சர்ச்சை பேச்சு: அமித்ஷாவுக்கு விஜய் கண்டனம்

4 weeks ago 4

சென்னை,

நாடாளுமன்ற மாநிலங்களவையில் அரசியல் சாசனம் விவாதத்தின்போது மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அம்பேத்கரை பற்றி சர்ச்சையாக பேசினார் என்றும் அவமதித்து விட்டதாகவும் கூறி இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அம்பேத்கரை பற்றிய சர்ச்சைப் பேச்சுக்கு அமித்ஷா உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-

யாரோ சிலருக்கு வேண்டுமானால் அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம். சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் இந்திய மக்கள் அனைவருக்கும் அவர்கள் உயரத்தில் வைத்துப் போற்றும் ஒப்பற்ற அரசியல் மற்றும் அறிவுலக ஆளுமை, அவர். அம்பேத்கர்... அம்பேத்கர்... அம்பேத்கர்... அவர் பெயரை உள்ளமும் உதடுகளும் மகிழ உச்சரித்துக்கொண்டே இருப்போம். எங்கள் கொள்கைத் தலைவரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அண்ணலை அவமதித்த மத்திய அரசின் உள்துறை மந்திரி அமித்ஷாவை, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

யாரோ சிலருக்கு வேண்டுமானால் அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம். சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் இந்திய மக்கள் அனைவருக்கும் அவர்கள் உயரத்தில் வைத்துப் போற்றும் ஒப்பற்ற அரசியல் மற்றும் அறிவுலக ஆளுமை, அவர்.அம்பேத்கர்...அம்பேத்கர்... அம்பேத்கர்...அவர் பெயரைஉள்ளமும் உதடுகளும்…

— TVK Vijay (@tvkvijayhq) December 18, 2024
Read Entire Article