அம்பேத்கருக்கு அவமதிப்பு அமித்ஷா பதவி விலக 3 நாள் போராட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு

4 weeks ago 5

புதுடெல்லி: அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசிய ஒன்றிய அமைச்சர் அமித் ஷா பதவி விலக வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி 3 நாள் தொடர் போராட்டம் அறிவித்துள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் பேசிய ஒன்றிய அமைச்சர் அமித் ஷா, அம்பேத்கர் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அம்பேத்கரை அவமதித்ததற்காக அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும். பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், அம்பேத்கர் குறித்த அமித் ஷாவின் பேச்சை கண்டித்து இன்று முதல் 3 நாட்களுக்கு நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம் நடத்த உள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் பொது செயலாளர் கே.சி.வேணுகோபால் நேற்று கூறுகையில்,‘‘ டாக்டர் அம்பேத்கரின் புகழை எடுத்துரைக்கும் விதமாக காங்கிரஸ் கட்சி சார்பில் பேரணிகள், பத்திரிகையாளர் சந்திப்புகள் நடத்தப்படும். 22,23 மற்றும் 24 தேதிகளில் நாடு முழுவதும் 150 இடங்களில் போராட்டம் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்புகள் நடைபெறும். வரும் வாரம் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தும் வாரமாக கடைப்பிடிக்கப்படும். வரும் 24ம் தேதி நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறும். அதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர்கள் மூலம் அமித் ஷாவை பதவி விலக செய்ய வலியுறுத்தி ஜனாதிபதிக்கு மனு அனுப்பப்படும்’’ என்றார்.

The post அம்பேத்கருக்கு அவமதிப்பு அமித்ஷா பதவி விலக 3 நாள் போராட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article