சென்னை: அமைச்சர்கள் பெரியகருப்பன் மற்றும் சிவசங்கர் மீதான வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் கோரி 2018ல் அரியலூர் பேருந்து நிலையம், ரயில் நிலையம் அருகே போராட்டம் நடத்தியதால் வழக்கு தொடரப்பட்டது. அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக அமைச்சர் சிவசங்கர் மீது 2018-ல் அரியலூர் போலீசார் 2 வழக்குகள் பதிவுசெய்தனர்.
கடந்த மக்களவை தேர்தலின் போது, நேரத்தை தாண்டி பிரச்சாரம் செய்ததாக, அமைச்சர் சிவசங்கர் மீது தேர்தல் விதி மீறல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அரியலூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 3 வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி அமைச்சர் சிவசங்கர் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுக்களை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், அமைச்சர் சிவசங்கரன் மீதான 3 வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.
2021 சட்டமன்ற தேர்தலின்போது விதிகளை மீறியதாக அமைச்சர் பெரியகருப்பன் மீது சிவகங்கை மாவட்டத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை ரத்து செய்யக்கோரிய அமைச்சர் பெரிய கருப்பன் மனுதாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். அமைச்சர்கள் பெரியகருப்பன் மற்றும் சிவசங்கர் மீதான வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
The post அமைச்சர்கள் பெரியகருப்பன் மற்றும் சிவசங்கர் மீதான வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!! appeared first on Dinakaran.