சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜராகியிருந்தார். விசாரணைக்கு தடயவியல் துறை கணினிப்பிரிவு உதவி இயக்குநர் மணிவண்ணன் ஆஜரானார். அவரிடம், செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் சி.ஆர்.மலர்வண்ணன் குறுக்கு விசாரணை நடத்தினார். குறுக்கு விசாரணை நிறைவடையாததையடுத்து விசாரணையை வரும் 29ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அன்றைய தினம் தடயவியல் துறை கணினிப்பிரிவு உதவி இயக்குநர் மணிவண்ணன் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.
The post அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு விசாரணை வரும் 29ம்தேதிக்கு தள்ளிவைப்பு: சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.