
சென்னை,
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் வீட்டில் 3-வது நாளாக அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ரவிச்சந்திரனின் இல்லத்தில் அதிகாரிகள் தொடர்ந்து 3-வது நாளாக சோதனை நடத்துகின்றனர்.
கோட்டூர்புரத்தில் உள்ள டி.வி.எச். நிறுவனத்தில் தலைமை அலுவலகத்திலும் சோதனை நடக்கிறது. அடையாறு காந்தி நகரில் உள்ள டி.வி.எச் நிறுவன இயக்குநர் ரமேஷ் வீட்டில் சோதனை நடந்து வருகிறது.
முறைகேடான பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனை, அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று திடீரென காரில் அழைத்து சென்றனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.