அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் மருத்துவமனையில் அனுமதி

1 week ago 4

சென்னை,

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரனின் வீடு மற்றும் அலுவலகங்களில், கடந்த 3 நாட்களாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். இதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில், இது குறித்து 2 நாட்களாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக கே.என்.ரவிச்சந்திரன் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனைவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ரத்த அழுத்தம் மற்றும் லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், கே.என்.ரவிச்சந்திரன் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Read Entire Article