அமெரிக்காவில் மருத்துவமனைக்குள் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தியவன் சுட்டுக் கொலை: 2 போலீஸ் அதிகாரிகள், செவிலியர் படுகாயம்

4 hours ago 1

பென்சில்வேனியா: அமெரிக்காவில் மருத்துவமனைக்குள் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தியவனை போலீசார் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் மத்திய பென்சில்வேனியாவில் அமைந்திருக்கும் மருத்துவமனையில் நுழைந்த மர்ம நபர், திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். அங்கிருந்த போலீசாரை நோக்கி துப்பாக்கி சூடுகள் நடத்தப்பட்டதால், பதிலுக்கு போலீசாரும் அந்த மர்ம நபரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர்.

இந்த மோதலில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் சுட்டுக் கொல்லப்பட்டார். இரு தரப்பு மோதலில் சிலர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பென்சில்வேனியா ஆளுநர் ஜோஷ் ஷாபிரோ கூறுகையில், ‘யார்க் கவுண்டியில் அமைந்திருக்கும் மெமோரியல் மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் கவலையளிக்கிறது. போலீசாரின் உடனடி நடவடிக்கையில் மக்கள் பாதுகாப்பாக உள்ளனர். எனவே மக்கள் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவமனை மீதான துப்பாக்கி சூடு தாக்குதல் தொடர்பான வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதில் போலீஸ் வாகனம் ஒன்று மருத்துவமனையை நெருங்குவதையும், மக்கள் வளாகத்தை விட்டு வெளியே ஓடுவதையும் காணலாம். துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு, போலீசார் அந்தப் பகுதியை சுற்றி வளைத்தனர். துப்பாக்கிச் சூட்டில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் மற்றும் ஒரு செவிலியர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தில் மருத்துவமனையின் அதிகாரிகள், நோயாளிகள் யாரும் காயமடையவில்லை என்றும், துப்பாக்கிச் சூடு நடத்தியவன் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டள்ளதாகவும் கூறப்படுகிறது.

The post அமெரிக்காவில் மருத்துவமனைக்குள் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தியவன் சுட்டுக் கொலை: 2 போலீஸ் அதிகாரிகள், செவிலியர் படுகாயம் appeared first on Dinakaran.

Read Entire Article