அமெரிக்காவில் பதுங்கியிருக்கும் அன்மோல் பிஷ்னோயை நாடு கடத்த நடவடிக்கை: மும்பை போலீஸ் பரிந்துரை

3 months ago 13

மும்பை: மும்பையில், தேசியவாத காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக் கடந்த மாதம் 12ம் தேதி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். நடிகர் சல்மான் கானுடன் நெருக்கமாக இருந்ததால் சித்திக்கை, லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர்கள் சுட்டுக் கொன்றது விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கில் லாரன்ஸ் பிஷ்னோய் மட்டுமின்றி அவரது தம்பி அன்மோல் பிஷ்னோய்க்கும் தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

லாரன்ஸ் பிஷ்னோய் குஜராத்தில் உள்ள சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அன்மோல் பிஷ்னோய் தலைமறைவாக உள்ளார். வெளிநாட்டில் தஞ்சமடைந்த அவரை கைது செய்ய தகவல் அளிப்போருக்கு ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என என்ஐஏ சமீபத்தில் அறிவித்தது.

இதற்கிடையே, அன்மோல் பிஷ்னோய் அமெரிக்காவில் இருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் மும்பை காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து அன்மோலை நாடு கடத்தி இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்க மும்பை போலீஸ் தரப்பில் ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதை உள்துறை அமைச்சகம் ஏற்றுக் கொண்ட பிறகு வெளியுறவு அமைச்சகம் மூலம் நாடு கடத்தும் நடவடிக்கைள் தொடங்கப்படும்.

The post அமெரிக்காவில் பதுங்கியிருக்கும் அன்மோல் பிஷ்னோயை நாடு கடத்த நடவடிக்கை: மும்பை போலீஸ் பரிந்துரை appeared first on Dinakaran.

Read Entire Article