அமெரிக்காவில் கார் விபத்து.. இந்திய மாணவி உயிரிழப்பு

6 months ago 27

வாஷிங்டன்:

அமெரிக்காவின் டென்னசி மாநிலம், மெம்பிஸ் பகுதியில் நேற்று அதிகாலையில் இந்திய மாணவர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளானது. இதில், நாக ஸ்ரீ வந்தன பரிமளா (வயது 26) என்ற மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். பவன், நிகித் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், காரின் பிரேக் பிடிக்காததால் மற்றொரு கார் மீது மோதியதாக தெரிய வந்துள்ளது.

விபத்தில் பலியான பரிமளா, இந்தியாவின் ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த தொழிலதிபரின் மகள் ஆவார். இவர் மேற்படிப்புக்காக 2022-ம் ஆண்டு அமெரிக்கா வந்துள்ளார்.

Read Entire Article