
சேலம்,
சேலம் தெற்கு கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு துறை அதிகாரி மரியா மைக்கேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஜோலார்பேட்டையில் உள்கட்டமைப்பு பராமரிப்பு பணிகளை மேம்படுத்த பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் ஈரோடு- ஜோலார்பேட்டை செல்லும் ரெயில் (வண்டி எண்-56108) நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் வருகிற 10-ந் தேதி (வியாழக்கிழமை) வரை 4 நாட்கள் திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை இடையே பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது. இந்த நாட்களில் ஈரோட்டில் இருந்து திருப்பத்தூர் வரை மட்டுமே இயக்கப்படும்.
ஜோலார்பேட்டை- ஈரோடு செல்லும் ரெயில் (வண்டி எண்-56107) நாளை மறுநாள் முதல் 10-ந் தேதி வரை ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் இடையே பகுதியளவு ரத்து செய்யப்படும். திருப்பத்தூரில் இருந்து புறப்பட்டு ஈரோடு வரை மட்டுமே இயக்கப்படும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.