அமர்நாத் குகைக்கோவிலுக்கு 3-வது யாத்திரை குழு பயணம்

7 hours ago 4

காஷ்மீர்,

காஷ்மீரில் 3 ஆயிரத்து 880 அடி உயரத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகைக்கோவிலில் இயற்கையாக தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்கும் அமர்நாத் புனித யாத்திரை கடந்த 3-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு 9-ந் தேதி வரை 38 நாட்கள் நடக்க இருக்கிறது. இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரைக்காக இதுவரை 3½ லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பதிவு செய்துள்ளனர். பக்தர்களை பகவதி நகர் அடிப்படை முகாமிலேயே பதிவு செய்வதற்காக 12 கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஜம்மு முழுவதும் 3 தங்குமிட மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பக்தர்களுக்கு ரேடியோ அதிர்வெண் அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன. ஜம்முவின் பகவதி நகர் அடிவார முகாமில் இருந்து முதல் குழு கடந்த 3-ந்தேதி புறப்பட்டது. இதனை காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்கா பூஜை செய்து கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதல் குழுவில் 5 ஆயிரத்து 892 பக்தர்கள் இடம்பெற்று இருந்தனர். யாத்திரை தொடங்கிய கடந்த 3-ந்தேதியில் இருந்து இதுவரை 14 ஆயிரம் பக்தர்கள் அமர்நாத் குகைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர்.

இந்நிலையில் 4 ஆயிரத்து 723 ஆண்கள், 1,071 பெண்கள், 37 குழந்தைகள், 580 சாதுக்கள் என 6 ஆயிரத்து 411 பக்தர்களை கொண்ட 3-வது குழு 291 வாகனங்களில் நேற்று புறப்பட்டது. பகவதி நகர் யாத்திரை முகாமில் இருந்து அவர்கள் 2 குழுக்களாக பால்டால், பஹல்காமுக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்புடன் அதிகாலையில் புறப்பட்டனர்.

யாத்திரை தொடங்கியதில் இருந்து இதுவரை 17 ஆயிரத்து 549 பக்தர்கள் ஜம்மு அடிப்படை முகாமில் இருந்து பள்ளத்தாக்குக்கு புறப்பட்டுள்ளனர். 3 ஆயிரத்து 622 பக்தர்கள் 48 கிலோமீட்டர் பாரம்பரிய பஹல்காம் பாதையில் 138 வாகனங்களில் செல்கின்றனர். 2 ஆயிரத்து 789 பக்தர்கள் 153 வாகனங்களில் பால்டால் பாதையில் செல்கின்றனர்.

Read Entire Article