
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் வெங்கட் பெஜுகம். இவர் தனது மனைவி தேஜஸ்வினி சோலெட்டி, மகன் சித்தார்த், மகள் மிருதா ஆகியோருடன் அமெரிக்காவின் டல்லாஸ் அருகே உள்ள சட்டன் பீல்ட்ஸ் பகுதியில் வசித்து வந்தார். இதற்கிடையே இவர்கள் அட்லாண்டாவில் உள்ள உறவினர்களின் வீடுகளுக்கு சென்றுவிட்டு காரில் திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது தவறான பாதையில் வந்த லாரி ஒன்று அவர்களது கார் மீது மோதியது. இதில் கார் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் வெங்கட் பெஜுகம்,தேஜஸ்வினி சோலெட்டி, சித்தார்த், மிருதா ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் இறுதிச் சடங்கு களுக்காக ஐதராபாத்திற்கு கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப் பட்டு வருவதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.