
அமெரிக்காவின் எல்லை வழியே அண்டை நாடுகளான மெக்சிகோ, கனடா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் சட்டவிரோத வகையில் அந்நாட்டுக்குள் புலம்பெயர்ந்து வருகின்றனர். இதுபோன்ற சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இதன்படி, சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் நடவடிக்கைகளை டிரம்ப் தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் இருந்து சட்ட விரோதமாக குடியேறியவர்களையும் வெளியேற்றும் நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. இதுவரை 3 குழுக்களாக இந்தியர்களை வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் இன்று 4-வது முறையாக 12 இந்தியர்களுடன் துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் டெல்லி வந்தடைந்தது.
இவர்களில் 4 பேர் பஞ்சாப்பைச் சேர்ந்தவர்கள், ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் தலா 3 பேர். ஒருவர் பற்றிய தகவல் அடையாளம் காணப்படவில்லை.