
துபாய்,
8 அணிகள் கலந்து கொண்டுள்ள சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் துபாயில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் பாகிஸ்தானை 6 விக்கெட்டுகளில் வீழ்த்திய இந்திய அணி அரைஇறுதிக்கு முன்னேறியது. இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலி அபாரமாக விளையாடி சதம் விளாசினார். ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் அவருடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
ஒருநாள் கிரிக்கெட்டில் 14 ஆயிரம் ரன்களை கடந்து கோலி புதிய சாதனை படைத்துள்ளார். 287 இன்னிங்சில் இந்த சாதனையை கோலி படைத்தார். இன்றையை போட்டியில் ஆட்ட நாயகன் விருதையும் விராட் கோலி வென்றார். ஒருநாள் கிரிக்கெட்டில் இது கோலியின் 51-வது சதம் ஆகும்.
இந்நிலையில் ஐ.சி.சி. தொடர்களில் பாகிஸ்தானுக்கு எதிராக 5 முறை ஆட்டநாயகன் விருதை வென்று, இந்திய வீரர் விராட் கோலி வரலாற்று சாதனை படைத்துள்ளார். ஐ.சி.சி. தொடர்களில் ஒரு அணிக்கு எதிராக வேறு எந்த வீரரும் 3 ஆட்டநாயகன் விருதுக்கு மேல் வெல்லாத நிலையில், விராட் கோலி பிரத்யேக சாதனை படைத்து அசத்தி உள்ளார்.
இதன்படி
2012 டி20 உலகக்கோப்பை - 78* (61) ரன்கள் (கொழும்பு)
2015 உலகக்கோப்பை ஒருநாள் போட்டி - 107 (126) ரன்கள் (அடிலெய்டு)
2016 டி20 உலகக்கோப்பை - 55* (37) ரன்கள் (கொல்கத்தா)
2022 டி20 உலகக்கோப்பை - 82* (53) ரன்கள் (மெல்பேர்ன்)
2025 சாம்பியன்ஸ் டிராபி - 100* (111) ரன்கள் (துபாய்)