
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் சாலையில் சுற்றி திரிந்த கடலூரை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவரை தன்னார்வலர் ஒருவர் மீட்டு அவருடைய பெற்றோரிடம் ஒப்படைத்திருக்கிறார். மகனை நேரில் கண்டதும் அவருடைய தாய் கண்ணீர் மல்க ஆரத்தழுவி கொண்டார்.
இந்த காட்சிகள் சுற்றியிருந்தோரை நெகிழ்ச்சியடைய செய்தன. இதன்பின்னர், அந்த இளைஞருக்கு முகச்சவரம் செய்து, குளிக்க வைத்து புது ஆடை அணிவிக்கப்பட்டது. அவருடைய தாய், சகோதரி உள்ளிட்ட குடும்பத்தினருடன் தன்னார்வலர் ஒன்றாக புகைப்படமும் எடுத்து கொண்டார். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.