
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவின்பேரில், கழுகுமலை பகுதியில் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, ஒரு பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி செய்ய முயற்சித்த வழக்கில் சம்பந்தப்பட்ட கயத்தாறு, கெச்சிலாபுரம் பகுதியைச் சேர்ந்த குமாரசாமி மகன் செந்தில் மள்ளர் (வயது 47) என்பவரை நேற்று கழுகுமலை காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.