
லக்னோ,
உத்தர பிரதேச் மாநிலம் ஹத்ராஸ் பகுதியை சேர்ந்த விவசாயி அஜித் என்பவரின் வங்கிக்கணக்கில் 36 இலக்கங்களுடன் ரூ.1,00,13,56,00,00,01,39,54,21,00,23,56,00,00,01,39,542 என்று பணத்தின் இருப்பு காட்டி உள்ளது.
இது குறித்து ஜம்மு காஷ்மீரில் உள்ள வங்கி கிளையை கண்காணித்தபோது, அது கணிணி மென்பொருளில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு என்று தகவல் தெரியவந்தது.
இதனால் சிறிது நேரம் அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்கை உ.பி. விவசாயி ஓவர்டேக் செய்துள்ளார். உலகின் பெரும் பணக்காரர், எலான் மஸ்கின் நிகர சொத்து மதிப்பு ரூ. 2,84,17,69,27,10,400 ($389 Billion) என்கிறார்கள். இது 14 இலக்கமாகும்.