'என்னுடைய அடுத்த படம் அதுதான்' - 'ரெட்ரோ' இயக்குனர்

3 hours ago 2

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 1-ம் தேதி வெளியான படம் 'ரெட்ரோ'. பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ரூ.70 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ள இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில், சமீபத்திய பேட்டியில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது அடுத்த பட அப்டேட் கொடுத்தார்.

அவர் கூறுகையில், "ரெட்ரோவுக்கு பிறகு என்னுடைய அடுத்த படம் ஒரு சுயாதீன படமாக இருக்கலாம். பல நாட்களுக்கு முன்பே இதன் ஸ்கிரிப்ட் தயாராகி விட்டது. சிறிய பட்ஜெட்டில் புதுமுக நடிகர்களை வைத்து இப்படத்தை உருவாக்க உள்ளேன்' என்றார்.

"My Next film after #Retro might be a independent film✌️. I will make a film, just send it to festivals, might be after an year will release in theatres. I have a script ready long back. It's a small budget film with new artist"- Karthiksubbarajpic.twitter.com/63973PQdwJ

— AmuthaBharathi (@CinemaWithAB) May 6, 2025
Read Entire Article