அமெரிக்க துணை ஜனாதிபதி 21ம் தேதி இந்தியா வருகை; பிரதமர் மோடியை சந்திக்கிறார்

1 week ago 2

டெல்லி,

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜேம்ஸ் டேவிட் வென்சி. இவரது மனைவி உஷா சிலுக்குரி வென்சி. உஷா இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார்.

இந்நிலையில், டேவிட் வென்சி வரும் 21ம் தேதி இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 4 நாட்கள் பயணமாக 21ம் தேதி டேவிட் வென்சி தனது மனைவி உஷாவுடன் இந்தியாவுக்கு வர உள்ளார். அவர் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் மோடியுடனான சந்திப்பிற்குபின் வென்சி ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மற்றும் உத்தரபிரதேசத்தின் ஆக்ராவுக்கு குடும்பத்துடன் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பயணத்தின்போது அமெரிக்கா, இந்தியா இடையேயான வர்த்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க துணை ஜனாதிபதியுடன் அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மார்க் வாட்ஸ்சும் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளதாக வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவரும் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலக அளவில் அமெரிக்கா, சீனா இடையே வர்த்தகப்போர் தீவிரமடைந்து வரும் நிலையில் அமெரிக்க துணை ஜனாதிபதியின் இந்திய வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Read Entire Article