அமெரிக்க தாக்குதலில் பொதுமக்களுக்கு பாதிப்பில்லை - ஈரான் விளக்கம்

6 hours ago 2

தெஹ்ரான்,

காசா மீது இஸ்ரேல் ஓராண்டுக்கும் மேலாக போர் தொடுத்து வரும் சூழலில், ஈரான் நாடும் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்ரேல் குடியிருப்புகளை இலக்காக கொண்டு, 200-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலும் அதற்கு பதிலடி கொடுத்தது.

இதன்பின்னர் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் தணிந்திருந்த சூழலில், திடீரென ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரான் மீது கடந்த 13-ந்தேதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதனை தொடர்ந்து ஈரானும் பதில் தாக்குதலில் ஈடுபட்டது. இதனால், 2 நாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது.

இதனை தொடர்ந்து, ஈரான் தலைநகரில் இருந்து மக்கள் வெளியேறும்படி அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்களுடைய குடிமக்களை அறிவுறுத்தி உள்ளன. இந்நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் போரில் களம் இறங்கியுள்ளது. அந்நாட்டின் முக்கிய 3 அணு உலைகளை தகர்த்துள்ளதாக தெரிவித்தது.

இதுபற்றி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ட்ரூத் சோசியலில் வெளியிட்டு உள்ள செய்தியில், ஈரானின் பர்தவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய 3 அணு உலைகள் மீது நாங்கள் வெற்றியுடன் தாக்குதல் நடத்தி முடித்துள்ளோம் என்று கூறியுள்ளார்.

இந்தநிலையில், அமெரிக்க தாக்குதலில் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பில்லை என்று ஈரான் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக ஈரான் தரப்பில் வெளியிட்ட தகவலின்படி,

அமெரிக்கா தாக்குதல் நடத்திய அணுசக்தி நிலையங்களில் எதுவுமே இல்லை.அணுசக்தி நிலையங்களில் தீங்கு விளைவிக்கும் எந்த பொருட்களும் இல்லை. செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்புகள் அந்த அணுசக்தி மையங்களிலிருந்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அணுசக்தி மேம்பாட்டை நிறுத்த ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அணுசக்தி தளங்கள் மீதான தாக்குதல்கள் சர்வதேச சட்டத்தை மீறுவதாகும். அமெரிக்க தாக்குதலில் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பில்லை என்று கூறப்பட்டுள்ளது.

Read Entire Article