அமெரிக்க சட்டத்தை மதித்து செயல்படுங்கள்: மாணவர்களுக்கு இந்தியா அறிவுரை

1 month ago 6

புதுடெல்லி,

இஸ்ரேல் - பாலஸ்தீன விவகாரத்தில் இஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டங்கள் நடைபெற்றன. அங்குள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மாணவ - மாணவிகள் போரட்டங்களில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற இந்திய மாணவி, ரஞ்சனி சீனிவாசனின் விசா ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து அவர் அமெரிக்காவில் இருந்து தாமாக வெளியேறினார். இதற்கிடையே, ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வரும் இந்திய மாணவரான பதர் கான் சூரி, ஹமாசுக்கு ஆதரவாக பிராசரம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு இந்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.

இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால் கூறியதாவது: இந்தியா வரும் வெளிநாட்டினர், நமது நாட்டு சட்ட திட்டங்களை மதித்து நடக்க வேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம். அதேபோல், வெளிநாடுகளுக்கு செல்லும் இந்திய மாணவர்கள் அந்நாட்டின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை மதித்து நடக்க வேண்டும் எனவும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். அமெரிக்காவில் உள்ள இந்திய மாணவர்களுக்கு பிரச்னை ஏற்பட்டால், அவர்களுக்கு உதவ தூதரகம் மற்றும் துணைத் தூதரக அலுவலகங்கள் தயாராக உள்ளன" என்றார். 

Read Entire Article