அமெரிக்க சட்டங்களை மீறி ரஷ்யாவுக்கு உதவிய இந்தியர் கைது

7 months ago 25

வாஷிங்டன்: அமெரிக்காவின் அரேசா ஏவியேஷன் நிறுவனம் டெல்லி கான்ட் பகுதியில் உள்ள மஹாராம் நகரை தளமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் நிர்வாக கூட்டாளியும் இந்தியரான சஞ்சய் கவுசிக்(57) அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவர் ஆஸ்திரியாவை சேர்ந்த மார்கஸ் கால்டெனகர் மற்றும் சிலருடன் சேர்ந்து அமெரிக்காவின் ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டவிதிகளை மீறி ரஷ்யாவில் உள்ள நிறுவனங்களுக்காக கொள்முதலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் கடந்த 17ம் தேதி இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்றபோது மியாமி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அவர் மீது கடந்த 21ம் தேதி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

The post அமெரிக்க சட்டங்களை மீறி ரஷ்யாவுக்கு உதவிய இந்தியர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article