அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் நடவடிக்கைக்கு போப் பிரான்சிஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக கடந்த மாதம் டொனால்ட் டிரம்ப் பதவியேற்றார். இதனை அடுத்து அவர் பல வரி விதிப்பது, குடியுரிமை சட்டத்தில் மாற்றம் என பல அதிரடி உத்தரவுகளை பிறபித்தார். அதன்படி, அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேரியவர்களை நாடுகடத்தும் நடவடிக்கைகளை அமெரிக்க ராணுவம் செய்து வருகிறது. இந்த நிலையில், இந்த நிலையில், அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் இந்த நடவடிக்கைக்கு போப் பிரான்சிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டிரம்ப்பின் நடவடிக்கையைக் கண்டித்து போப் பிரான்சிஸ் எழுதிய கடிதத்தில்;
பிற நாடுகளில் ஏற்படும் மோதல்கள், வறுமை, பாதுகாப்பின்மை, சுரண்டல், துன்புறுத்தல், காலநிலை பேரழிவுகளிலிருந்து தப்பிப் பிழைத்து, அமெரிக்காவுக்கு வருபவர்களை வரவேற்று, பாதுகாக்கப்பட்டு, அவர்களை ஊக்குவிக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
சொந்த நிலத்தைவிட்டு வெளியேறிய மக்களை நாடுகடத்தும் செயல், அவர்களின் கண்ணியத்தை பாதிக்கிறது. மற்ற நாடுகளில் குடிபெயர்ந்தோர் பாதுகாக்கப்படுகின்றனர், ஆனால், அமெரிக்காவை நினைத்தால் கவலையாக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
The post அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் நாடுகடத்தும் நடவடிக்கைக்கு போப் பிரான்சிஸ் எதிர்ப்பு appeared first on Dinakaran.