![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/13/39359676-pm-modi.webp)
வாஷிங்டன்,
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை பிரதமர் மோடி சந்தித்து பேசியுள்ளார். வெள்ளை மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. வர்த்தகம், பாதுகாப்பு, தொழில் நுட்பம் உள்ளிட்டவை தொடர்பாக இரு தலைவர்களும் ஆலோசித்ததாக சொல்லப்படுகிறது. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற பிறகு பிரதமர் மோடி, அவரை சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.