"எல் 2 எம்புரான்" - நடிகர் சாய்குமாரின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியீடு

1 day ago 5

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் மோகன்லால். இவர் நடிப்பில், மலையாள நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'லூசிபர்'. இந்த படத்தின் மூலம் பிருத்விராஜ் இயக்குனராக அறிமுகமானார். தற்போது, இந்த படத்தின் 2-ம் பாகம் தயாராகி வருகிறது. இந்த படத்திற்கு 'எல் 2 எம்புரான்' என பெயரிடப்பட்டுள்ளது. இதில், மோகன்லால், பிருத்விராஜ், மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

'லூசிபர்' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளதால் இதன் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. டோவினோ தாமஸ் இப்படத்தில் ஜதின் ராம்தாஸ் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் நடித்துள்ள முக்கியமான 36 கதாபாத்திரங்களை 18 நாட்களில் வெளியிட 'எல் 2 எம்புரான்' படக்குழு திட்டமிட்டுள்ளது.

அதன்படி, நடிகர் அனீஷ் ஜி மேனனின் இப்படத்தில் 'சுமேஷ்' என்ற கதாபாத்திரத்திலும், முருகன் மார்டின் 'முத்து' என்ற கதாபாத்திரத்திலும், நடிகை சானிய ஐயப்பன் இப்படத்தில் 'ஜான்வி' என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளதாக படக்குழு அறிவித்தது. அதேபோல, 17-வது கதாபாத்திரமான நடிகர் சாய்குமாரின் அறிமுக போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி, நடிகர் நடிகர் சாய்குமார் இப்படத்தில் 'மகேஷ் வர்மா' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் மார்ச் 27-ந் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Character No.17Saikumar as Mahesha Varma in #L2E #EMPURAAN https://t.co/FnLUcFI7FyMalayalam | Tamil | Hindi | Telugu | Kannada #March27 @mohanlal #muraligopy @antonypbvr @aashirvadcine @Subaskaran_A @LycaProductions @gkmtamilkumaran @prithvirajprod #SureshBalajepic.twitter.com/qlnmKXHGI3

— Prithviraj Sukumaran (@PrithviOfficial) February 18, 2025
Read Entire Article