அமித்ஷா வருகை: ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் 2 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை

16 hours ago 1

ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வருகின்ற 06.03.2025 மற்றும் 07.03.2025 ஆகிய தேதிகளில் மத்திய உள்துறை மந்திரி அவர்கள் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தக்கோலத்தில் உள்ள மத்திய தொழிற் பாதுகாப்பு படை (CISF) பயிற்சி மையத்திற்கு வருகை தர இருப்பதால் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா இ.கா.ப., அவர்கள் 06.03.2025 மற்றும் 07.03.2025 ஆகிய தேதிகளில் ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதையும் டிரோன்கள் (Drones) மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் (Other Unmanned Aerial Vehicles) பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளார்.

மேலும் பாதுகாப்பு காரணமாக டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதும் இதன்மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article