அமித்ஷா செய்தியாளர் சந்திப்பு: மேடையில் இடம்பெற்ற நயினார் நாகேந்திரன் படம்

1 week ago 3

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தற்போதே தேர்தல் நடவடிக்கைகளை தொடங்கி விட்டன.

அந்த வகையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் எவை? என்பதை முடிவு செய்ய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சென்னை வந்துள்ளார்.

அவர் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்தார். குருமூர்த்தியிடம் 1 மணிநேரத்திற்குமேல் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.

இதனை தொடர்ந்து சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஓட்டலில் அமித்ஷா இன்று செய்தியாளர்களை சந்திக்கிறார். இன்னும் சற்றுநேரத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற உள்ளது.

அதேவேளை, பாஜக மாநில தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடுவோர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஆனால், பாஜக மாநில தலைவர் தேர்தலில் போட்டியிட நயினார் நாகேந்திரன் விருப்ப மனு தாக்கல் செய்ய உள்ளார். தற்போதைய நிலவரப்படி, தேர்தலில் போட்டியிட நயினார் நாகேந்திர மட்டுமே விருப்ப மனு தாக்கல் செய்ய உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் பாஜக மாநில தலைவராக போட்டியின்றி நயினார் நாகேந்திரன் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கிண்டியில் உள்ள ஓட்டலில் அமித்ஷா செய்தியாளர்களை சந்திக்கிறார். இந்த சந்திப்பு நடைபெறும் மேடையில் 7 இருக்கைகள் போடப்பட்டுள்ளன. இந்த மேடைக்குபின்புறம் அமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பேனரில் நயினார் நாகேந்திரன் படம் இடம்பெற்றுள்ளது. பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்கள் பரவி வரும் நிலையில் அமித்ஷா செய்தியாளர் சந்திப்பு மேடையில் அவரின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

பிரதமர் மோடி, அமித்ஷா, ஜேபி நட்டா, அண்ணாமலை, எல்.முருகன், நயினார் நாகேந்திரன் ஆகியோரின் புகைப்படங்கள் டிஜிட்டல் பேனரில் இடம்பெற்றுள்ளன.

Read Entire Article