அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட அரசு ஆணை

1 month ago 5

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், அமராவதி ஆற்றில் உள்ள முதல் எட்டு பழைய இராஜ வாய்க்கால்களின் (இராமகுளம், கல்லாபுரம், குமரலிங்கம், சர்க்கார் கண்ணாடிபுத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர் மற்றும் காரத்தொழுவு) பாசன நிலங்களின் இரண்டாம் போக பாசனத்திற்காக அமராவதி ஆற்று மதகு வழியாக 06.12.2024 முதல் 24.02.2025 வரை (80 நாட்களில், 41 நாட்கள் தண்ணீர் திறப்பு 39 நாட்கள் தண்ணீர் அடைப்பு என்ற அடிப்படையில்) வினாடிக்கு 300 கன அடி வீதம் 1062.72 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தகுந்த இடைவெளி விட்டு, அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால், திருப்பூர் மாவட்டத்திலுள்ள 7520 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

The post அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட அரசு ஆணை appeared first on Dinakaran.

Read Entire Article