
சென்னை,
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் இந்த படத்தில் 'முகுந்தன்' என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். புவன் அரோரா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
'அமரன்' திரைப்படம் வருகிற 31-ந் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடி வீர மரணமடைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் கதையை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. சமீபத்தில் 'அமரன்' படக்குழு கிளிம்ப்ஸ் வீடியோவை பகிர்ந்தது. இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. மேலும், நடிகர் சிவகார்த்திகேயன் படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளார்.

அமரன் படத்தின் 'ஹே மின்னலே' பாடல் நாளை வெளியாக உள்ளது. இப்பாடல் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் 700-வது பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 'அமரன்' படத்தின் ஹே மின்னலே' என்ற பாடலின் புரோமோவை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. இப்பாடலை கார்த்திக் நேதா வரிகளில் ஸ்வேதா மோகன் மற்றும் ஹரிச்சரண் இணைந்து பாடியுள்ளனர்.