![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/11/38901847-6.webp)
சென்னை,
ராஜு சந்ரா எழுதி இயக்கி, பிளான் த்ரீ ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில்,ரோஜி மேத்யூ, ராஜு சந்ரா இருவரும் தயாரித்துள்ளனர். மாதன்ஸ் குழுமம் இணைந்து தயாரித்துள்ளது. மலையாள நடிகை ஐஸ்வர்யா அனில், இப்படத்தின் மூலம் தமிழில் கதையின் நாயகியாக அறிமுகம் ஆகிறார்.
கிராமத்து எதார்த்தத்தை, காதலுடன் காமெடி கலந்து, ஜனரஞ்சகமாக கதை எழுதி, ஒளிப்பதிவு செய்து, இயக்கியுள்ளார் ராஜூ சந்ரா. இசையை நவநீத் அமைக்க, கலையை வினோத் குமார் கையாண்டுள்ளார். மலையாளத்தில் இரண்டு படங்கள் இயக்கிய ராஜுசந்ராவின் முதல் தமிழ்ப்படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
அப்புக்குட்டி இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். டாக்டர் உட்பட பல வெற்றிப்படங்களில், குணச்சித்திர பாத்திரங்களில் நடித்த நடிகை ஸ்ரீஜாரவி, இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில், வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் ஐஸ்வர்யா அனில்குமார், ரோஜி மாத்யூ, சந்தோஷ் சுவாமிநாதன், ஈஸ்வரி, நீலா கருணாகரன், சுல்பியா மஜீத், இன்பரசு, ராகேந்து, விஷ்ணு, வேல்முருகன், ருக்மணி பாபு, வினு அச்சுதன், பக்தவத்சலன், அமித் மாதவன், விபின் தேவ், வினீத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி , ஆலியார் டேம், கேரளவிலுள்ள வாகமன் ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவுற்ற நிலையில், பட வெளியீட்டுப் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் அப்புக்குட்டியின் "பிறந்தநாள் வாழ்த்துகள்" டிரெய்லரை நடிகர்கள் விஜய் சேதுபதி, நட்டி நடராஜ், சசிகுமார், துல்கர் சல்மான் மற்றும் பிரபல இயக்குனர்கள் இணைந்து வெளியிட்டுள்ளனர். மேலும் இப்படம் வரும் 21-ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.