அபுதாபி இந்து கோயிலில் ரத யாத்திரை

7 hours ago 2


அபுதாபி: ஒடிசா மாநிலத்தின் இந்து பண்டிகைகளில் புரி ரத யாத்திரை உலக புகழ் பெற்றதாகும். இதனை பிரதிபலிக்கும் வகையில் அபுதாபி இந்து கோயிலில் ரத யாத்திரை மிக கோலாகலமாக நேற்று நடந்தது. இதில், சிவப்பு மற்றும் மஞ்சள் என 2 வகையான வண்ணங்களில் 6 சக்கரங்கள் கொண்ட மரத்திலான ரதங்கள் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

இந்த ரதத்தில் உற்சவ மூர்த்தியான பூரி ஜெகன்நாதர், பாலபத்திரர் மற்றும் சுபத்ரா தேவியின் சிலைகள் வைக்கப்பட்டது. மற்றொரு ரதத்தில்  அக்ஷர்-புருஷோத்தம் மஹராஜ் சிலைகளும் வைக்கப்பட்டன. ஏராளமான பக்தர்கள், ரதத்தை இழுத்தபடி வந்தனர். ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.

The post அபுதாபி இந்து கோயிலில் ரத யாத்திரை appeared first on Dinakaran.

Read Entire Article