சென்னை,
நாட்டின் 76-வது குடியரசு தினவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் குடியரசு தினத்தையொட்டி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,
எண்ணற்ற வீரர்களின் தியாகத்தால் விளைந்த சுதந்திர இந்தியாவில், அனைவருக்குமான உரிமைகளை நிலைநாட்ட, தனி அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட தினமான இந்தக் குடியரசு தினத்தில், அதற்கு வித்திட்ட தியாகிகளை நினைவுகூர்ந்து, அனைவருக்குமான சம உரிமை மற்றும் சமூக உரிமைகள் கிடைத்திட அனைவருக்குமான வளர்ச்சியை முன்னெடுக்க உறுதியேற்போம். என தெரிவித்துள்ளார் .