அனைத்துத் தரப்பு மக்களுக்குமான, தொலை நோக்குச் சிந்தனையுடன் கூடிய பட்ஜெட்- அண்ணாமலை

2 hours ago 1

சென்னை,

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இன்றைய தினம். நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வழிகாட்டுதலின்படி, 2025 - 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நமது மத்திய நிதிமந்திரி தாக்கல் செய்துள்ளார். 'வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோல்நோக்கி வாழுங் குடி என்ற அற்புதமான திருக்குறளை மேற்கோள் காட்டி நமது நிதிமந்திரி தாக்கல் செய்துள்ள இந்த பட்ஜெட் ஏழை எளிய மக்கள் விவசாயிகள், நடுத்தர மக்கள். தொழில்துறையினர், இளைஞர்கள், தாய்மார்கள் மாணவர்கள் என, அனைத்துத் தரப்பினருக்குமான மிக அற்புதமான, பொதுமக்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் பட்ஜெட்டாக அமைந்துள்ளது.

இந்த பட்ஜெட்டின் சிறப்பு அம்சங்கள் சிலவற்றை, தமிழக மக்கள் கவனத்துக்கு எடுத்துச் செல்ல விரும்புகிறேன்.

வருமான வரி உச்சவரம்பு

ஆண்டுக்கு, ரூ 12 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமான வரி கிடையாது என்ற நமது நிதியமைச்சரின் அறிவிப்பு, நடுத்தர வர்க்கத்தினருக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது என்றால் மிகையாகாது. இத்துடன், ரூ. 75,000 நிலையான வரி விலக்குடன் சேர்த்து, இனி ஆண்டுக்கு ரூ. 12.75 லட்சம் வரை வருமானம் ஈட்டும் தொழிலாளர்கள் வருமான வரி கட்டத் தேவையில்லை. இதன் மூலம், நடுத்தர வர்க்கத்தினரின் சேமிப்பு மற்றும் முதலீடு அதிகரிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

மேலும் மூத்த குடிமக்களுக்கான வட்டி மீதான, வரி விலக்கு உச்சவரம்பு 50.000 த்திலிருந்து 1 லட்சமாக இரட்டிப்பாக்கப்படும் என்ற அறிவிப்பு, மூத்த குடிமக்களுக்கு மிகவும் ஆதரவானதாக அமைந்துள்ளது.

நமது மத்திய நிதிமந்திரி அவர்கள், பிரதம மந்திரி தன் தான்யா க்ரிஷி யோஜனா என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். இதன் மூலம், நாடு முழுவதும் உள்ள 100 பின்தங்கிய விவசாய மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டு, விவசாயிகளின் விவசாய உற்பத்தித்திறனை அதிகரிக்கவும் அறுவடைக்குப் பிந்தைய சேமிப்பை அதிகரிக்கவும் நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்தவும். விவசாயிகளுக்கு கடன் கிடைக்கும் வசதியை மேம்படுத்தவும், பணிகள் நடைபெறும்.

நாட்டுக்கு மேலும், கிசான் கடன் அட்டைகள் (KCC) மூலம். 7.7 கோடி விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பால் பண்ணை விவசாயிகளுக்கு குறுகிய கால கடன்தொகை உச்சவரம்பு. மாற்றியமைக்கப்பட்ட வட்டி மானியத் திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு விவசாயிகளுக்கும். மீனவர்களுக்கும் மிகுந்த பயனுள்ளதாக அமைந்திருக்கிறது.

தொழில்துறை

நமது நாட்டில் உள்ள சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களில் சுமார் 7.5 கோடி பொதுமக்கள் பணிபுரிகிறார்கள். இந்த நிறுவனங்கள் நாட்டின் ஏற்றுமதியில் 45% பங்களிப்பும். உற்பத்தியில் 36% பங்களிப்பும் வழங்குகின்றன.

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான முதலீடு மற்றும் வருமான வரம்பு உயர்த்தியிருப்பது, சிறு, குறு. நடுத்தர நிறுவனங்கள் தொய்வின்றி செயல்பட்டு இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க நம்பிக்கை அளிக்கும் விதமாக அமைந்திருக்கிறது.

ரூ.1 கோடி முதலீடு வரை சிறு நிறுவனங்களாக இருந்தவை. இனி ரூ.2.5 கோடி வரையும், அதே போல, ரூ.10 கோடி முதலீடு வரம்பில் இருந்த குறு நிறுவனங்கள், இனி ரூ.25 கோடி வரையும், ரூ. 50 கோடி முதலீடு வரம்பில் இருந்த நடுத்தர நிறுவனங்கள் இனி ரூ.125 கோடி வரையும் முதலீடு செய்யலாம் என்றும், இவற்றின் வருமான உச்சவரம்பு முறையே, ஆண்டு வருமானம் ரூ.5 கோடியிலிருந்து ரூ.10 கோடியாகவும், ரூ.50 கோடியிலிருந்து ரூ.100 கோடியாகவும், ரூ. 250 கோடியிலிருந்து 1.500 கோடியாகவும் அதிகரித்திருப்பதன் மூலம் தொழில்துறையினர் மிகுந்த பலனடைவார்கள்.

இந்த நிறுவனங்கள் கடன்களைப் பெறுவதை எளிதாக்கவும். கடன் உத்தரவாதக் காப்பீடு கணிசமாக அதிகரிக்கப்பட்டும். சிறு, குறு நிறுவனங்களுக்கு. 5 கோடியிலிருந்து ரூ.10 கோடியாக, அடுத்த 5 ஆண்டுகளில் 1.5 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் கடன் வழங்கப்படும் என்ற அறிவிப்பும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடன் ரூ.10 கோடியிலிருந்து ரூ.20 கோடியாக அதிகரிக்கப்படும் என்ற அறிவிப்பும். தொழில்துறையில் ஒரு புரட்சியாகவே அமைந்துள்ளது என்றால் மிகையாகாது. மேலும் மத்திய அரசின் உதயம் வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள குறு நிறுவனங்களுக்கு, ரூ.5 லட்சம் வரம்புடன் கடன் அட்டைகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும். முதல் ஆண்டில் 10 லட்சம் நிறுவனங்களுக்கு கடன் அட்டைகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பும் மிகவும் வரவேற்கத்தக்கவை.

மேலும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான தற்போதுள்ள ரூ.10,000 கோடி மத்திய அரசு நிதியுடன். கூடுதலாக ரூ.10.000 கோடி புதிய நிதியுதவியும் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற அறிவிப்பு. இளைஞர்களைத் தொழில்முனைவோராக்க உத்வேகம் அளிக்கும்.

மேலும், முதல் முறை தொழில்முனைவோராகும் 5 லட்சம் பெண்கள் பட்டியல் சமூக மக்கள், மற்றும் பழங்குடியினருக்கு அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி ரூபாய் வரை கடனுதவி மற்றும் தொழில்முனைவோர் மற்றும் நிர்வாகத் திறன்களுக்காக திறன் மேம்பாட்டுப் பயிற்சியும் வழங்கப்படும் என்ற அறிவிப்பு, சமூசு நீதிக்கான எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

நாட்டுக்கு தோல் தொழில்கள்

இந்தியாவின் காலணி மற்றும் தோல் துறையின் உற்பத்தித்திறன், தரத்தினை மேம்படுத்த, காலணி மற்றும் தோல் துறைகளுக்கு, பிரேத்யேக தயாரிப்பு திட்டம் தொடங்கப்படும் என்ற அறிவிப்பின் மூலம், 22 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு மற்றும் ரூ.4 லட்சம் கோடி வருவாய் மற்றும் 1.1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் ஏற்றுமதி நடைபெற வாய்ப்பு உள்ளது.

ஜவுளித்துறை

வேளாண்-ஜவுளி, மருத்துவ ஜவுளி மற்றும் ஜியோ ஜவுளி போன்ற தொழில்நுட்ப ஜவுளிப் பொருட்களின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக முழுமையாக விலக்கு அளிக்கப்பட்ட ஜவுளி இயந்திரங்களின் பட்டியலில் மேலும் இரண்டு வகையான ஷட்டில்-லெஸ் தறிகள் சேர்க்கப்பட்டுள்ளதும், பின்னலாடைகளுக்கான அடிப்படை தங்க வரி எளிமைப்படுத்தப்பட்டுள்ளதும் மிகவும் வரவேற்கத்தக்கது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article