மும்பை: நிதி மோசடிகளைத் தடுக்கும் நோக்கில் பரிவர்த்தனை நோக்கங்களுக்காக வாடிக்கையாளர்களை அழைக்க, ‘1600xx’ தொலைபேசி எண் தொடரை மட்டுமே பயன்படுத்துமாறு வங்கிகளை ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் விளம்பர நோக்கங்களுக்காக, வங்கிகள் மற்றும் பிற ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களின் குரல் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் செய்யப்படும் நிதி மோசடிகளைத் தடுக்க ‘140xx’ எண் தொடர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ள இந்த நேரத்தில் மோசடிகளும் அதிகரித்துள்ளதால் இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கை அவசியம் என்று ரிசர்வ் வங்கி சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசடி செய்பவர்கள் பல வழிகளில் மொபைல் எண்ணை தவறாகப் பயன்படுத்தலாம். எனவே ‘1600xx’ எண்ணின் வரிசையைப் பயன்படுத்தி மட்டுமே பரிவர்த்தனை / சேவை அழைப்புகளை மேற்கொள்ள வேண்டும். ‘140xx’ எண் தொடர்களைப் பயன்படுத்தி மட்டுமே விளம்பர குரல் அழைப்பு, எஸ்எம்எஸ்களை அனுப்ப வேண்டும். இந்த நடவடிக்கைகளை மார்ச் 31ம் தேதிக்குள் அனைத்து வங்கிகளும் நிறைவேற்றி முடிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
The post அனைத்து வங்கி பரிவர்த்தனைகளுக்கும் வாடிக்கையாளர்களை அழைக்க ‘1600xx’ எண்: மோசடியை தடுக்க ரிசர்வ் வங்கி அதிரடி appeared first on Dinakaran.