*யூரியா 2344, டிஏபி 260 மெ.டன் தயார்
*குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் தகவல்
கரூர் : கரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று காலை 11 மணி முதல் 1 மணி வரை நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார்.தமிழ்நாடு அரசால் விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வேளாண் உற்பத்திககு முக்கியத்துவம் அளித்து அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிற அனைத்து திட்டங்களையும் வேளாண் மக்களுக்கு முழுமையாக கொண்டு சேர்ப்பதுடன் விவசாயிகளின் குறைகளை அனைத்து துறை அலுவலர்கள் அறிந்து நிவர்த்தி செய்யும் வகையில் மாதந்தோறும் இதுபோன்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுகிறது.
கரூர் மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தெரிவிக்கப்படும் கோரிக்கைகள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைள் குறித்து அடுத்த 10 நாள் முதல் 15 நாட்களுக்குள் தொடர்புடைய விவசாயிகளுக்கு அஞ்சல் மூலம் பதில் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் போதுமான அளவில் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் யூரியா 2344 மெ.டன்னும், டிஏபி 260 மெ.டன்னும், பொட்டாஷ் 1636 மெ.டன்னும், என்பிகே 1811 மெ.டன்னும் என மொத்தம் 6051 மெ. டன் ரசாயன உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் நெற்பயிர் சாகுபடிக்காக சிஒ 55 1,70 மெ. டன்னும், சிறுதானியங்கள் கம்பு கோ 10, சோளம் சிஒ 32, கே12 ஆகியவை 32 மெ.டன்னும், பயறு வகை பயிர்கள் உளுந்து& விபிஎன் & 8, விபிஎன்&10, கொள்ளு பையூர்&2 ஆகியவை 7 மெ.டன்னும், எண்ணெய் வித்துக்கள், நிலக்கடலை தரணி- கோ & 7, எள் விஆர்ஐ & 7 ஆகியவை 48.700 மெ.டன்னும் இருப்பில் உள்ளது. கரூர் மாவட்டத்தின் இயல்பான ஆண்டு மழை அளவு 652.20 மிமீ நடப்பு ஆண்டு ஜனவரி 2025 வரை 9 மிமீ மழை பெய்துள்ளது.
இதே போன்று, ஜனவரி மாதம் வரை 56.957 ஹெக்டேர் பரப்பளவில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி உரிய முறையில் விவசாய பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்றார்.
மேலும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் விவசாயிகளுக்கான பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பூச்சி நோய் விழிப்புணாவு வழிகாட்டி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு அடைவதை உறுதி செய்வதற்கும், நிர்ணயம் செய்யப்பட்ட உற்பத்தி இலககை அடைவதற்கும் சரியான தருணத்தில் பயிர் பாதுகாப்பு முறைகளை மேற்கொள்வது மிகவும் அவசியமாகும்.
ஆண்டுதோறும் காலநிலை மறறும் பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் பல்வேறு பூச்சி நோய் தாக்குதலால் விவசாயிகளுககு பெரிய அளவில் மகசூல் இழப்பு ஏற்படுகிறது.
எனவே, பூச்சி நோய் தாக்குதல் அறிகுறிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அவற்றை கட்டுப்படுத்திட வசதியாக விவசாயிகள அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் பூச்சி நோய் விழிப்புணர்வு வழிகாட்டியானது விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
இதன் விளைவாக, ரசாயன பூச்சிக் கொல்லிகளின் பயன்பாடு குறைவதுடன், அனைவருக்கும நஞ்சில்லா உணவு சென்றடைவது உறுதி செய்யப்படும். புவி வெப்படைதல் மற்றும் பருவமழையின் மாறுபாடுகள் போன்ற நிகழ்வுகள் காரணமாக அனைத்து பயிர்களும் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு அதிகளவு செலவினம் ஏற்படுகிறது.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், உற்பத்தியை அதிகரித்து பயிர்களில் ஏற்படும் பூச்சி நோய் தாக்குதலில் இருந்து பயிர்களை பாதுகாக்கவும், விழிப்புணர்வு மற்றுமு முறையான பயிற்சிகள் அவசியமானது. குறிப்பாக, உயிரியல் முறையில் பூச்சி நோய் தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் ஆரம்ப நிலையிலேயே குறைந்த செலவில் பயிர் பாதுகாப்பினை உறுதி செய்ய இயலும்.
மேலும், கரூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பாக நாடடுக்கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் நோய் தடுப்பூசி 2,15,000 டோஸ்கள் பெறப்பட்டு, இருவார கோழி வெள்ளைக் கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் கடந்த பிப்ரவரி 1ம்தேதி முதல் 14ம்தேதி வரை நடைபெறுகிறது.
இதில், 7ம்தேதி வரை 91,245 கோழிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது எனவும கலெக்டர் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வின் போது விவசாயிகளிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் கொண்ட 110 மனுக்கள் பெறப்பட்டது.
முன்னதாக, வேளாண்மை மற்றும் உழவர் நலததுறையின் சார்பாக தயாரிக்கப்பட்ட ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு குறித்த பூச்சிநோய் விழிப்புணாவு வழிகாட்டியை கலெக்டர் விவசாயிகளுக்கு வழங்கினார்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், சாராட்சியர் சுவாதி, வேளாண்மை இணை இயக்குநர் சிவானந்தம், கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் சாந்தி, நேர்முக உதவியாளர் (வேளாண்மை) உமா, தனித்துணை ஆட்சியர் பிரகாசம், மாவட்ட வழங்கல் அலுவலர் சுரேஷ், உதவி இயக்குநர் ஊராட்சிகள் சரவணன், உதவி ஆணையர் கலால் கருணாகரன் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.
வேளாண் விற்பனை கண்காட்சி
விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தை முன்னிட்டு கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பல்வேறு வகையான வேளாண் விற்பனை கண்காட்சி வைக்கப்படிருந்தது. இதில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடைபராமரிப்புத் துறை போன்ற பல்வேறு துறைகளின் சார்பில் விளக்க கண்காட்சியும், துறை சம்பந்தமான பொருட்கள் விற்பனை கண்காட்சியும் இடம் பெற்றிருந்தன.
The post அனைத்து தனியார், கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளின் சாகுபடிக்கு போதுமான உரங்கள் கையிருப்பு appeared first on Dinakaran.