அனுமதியின்றி பேரணி- புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி கைது .!

2 months ago 16
சென்னை எழும்பூரில் அனுமதியின்றி பேரணியாக செல்ல முயன்றதாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி உள்பட சுமார் 600 பேர் கைது செய்யப்பட்டனர். அருந்ததியருக்கான உள் இடஒதுக்கீட்டு அரசாணையை ரத்து செய்ய பேரணியாக சென்று ஆளுநரிடம் மனு அளிக்க கட்சியினர் திரண்டிருந்த நிலையில் உரிய அனுமதி பெறவில்லை என போலீஸார் தெரிவித்தனர். இதனால், ஏற்கனவே அனுமதி பெறப்பட்டிருப்பதாக கட்சியினர் தெரிவித்ததால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், சாலையில் படுத்து உருண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கட்சியினரை போலீஸார் குண்டு கட்டாக தூக்கிச் சென்றனர்.
Read Entire Article