அனுமதி பெறாத ஆழ்துளை கிணறுகளை மூடக்கோரி மனு

2 months ago 7

 

ஈரோடு, பிப்.19: அனுமதி பெறாமல் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்துள்ள கொங்கர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் நேற்று கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கொங்கர்பாளையம் ஊராட்சி, வினோபா நகரில் சிலர் 1,000 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணறுகள் அமைத்து தண்ணீரை உறிஞ்சி, வெகு துாரத்துக்கு குழாய் மூலமாக எடுத்துச் சென்று பல்வேறு பயன்பாடுகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். அதை பார்த்து பலரும் ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் எடுத்து செல்வது தொடர் கதையாகிறது. தவிர, பெரும்பாலானவர்கள் ஆழ்துளை கிணறு அமைக்க ஊராட்சியில் உரிய அனுமதியையும் பெறுவதில்லை. இந்நிலையில், இதே பகுதியில் ஊராட்சிக்கு சொந்தமான திறந்த வெளி கிணறு உள்ளது.

தனி நபர்கள் அதிக அளவில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து தண்ணீரை உறிஞ்சுவதால், கோடை காலத்தில் ஊராட்சியின் திறந்தவெளி கிணற்றில் தண்ணீர் வற்றிவிடும். இதனால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகும் நிலை ஏற்படும்.இது குறித்து கடந்த 2022ல் ஊராட்சியில் விவாதிக்கப்பட்டு ஆழ்துளை கிணறு அமைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவும் செய்ய்யப்பட்டது. ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தற்போது பொதுமக்கள் நலன் கருதி அனுமதி பெறாமல் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகளை மூட நவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

The post அனுமதி பெறாத ஆழ்துளை கிணறுகளை மூடக்கோரி மனு appeared first on Dinakaran.

Read Entire Article