
சென்னை,
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அனுபமா. இவர், சமீபத்தில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான 'டிராகன்' படத்தில் தனது அற்புதமான நடிப்பை வெளிகாட்டி இருந்தார்.
தற்போது இவர் பிரவீன் கந்த்ரேகுலா இயக்கத்தில் 'பரதா' படத்திலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் 'பைசன்' படத்திலும் நடித்து வருகிறார். மேலும், கவுசிக் பெகல்லபதி இயக்கத்தில் ஹாரர் திரில்லர் படத்திலும் நடித்து வருகிறார்.
பெல்லம்கொண்டா சாய் சீனிவாஸ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு 'கிஷ்கிந்தாபுரி' எனப்பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வெளியாகி வைரலாகி வருகிறது.