வேளச்சேரியில் ரூ.231 கோடியில் புதிய பாலம் அமைக்க டெண்டர் கோரியது சென்னை மாநகராட்சி

8 hours ago 1

சென்னை,

சென்னை வேளச்சேரியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க வேளச்சேரி பிரதான சாலையில் இருந்து குருநானக் கல்லூரி வரையில் 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய பாலம் கட்டுவதற்கு சென்னை மாநகராட்சி டெண்டர் கோரியுள்ளது.

இதுகுறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கிண்டி கவர்னர் மாளிகை அருகே சர்தார் பட்டேல் சாலையில் தொடங்கி, அதாவது வேளச்சேரி பிரதான சாலை சந்திப்பில் இருந்து குருநானக் கல்லூரி வரை 100 அடி சாலையில் முடியும் வகையில் இந்த புதிய பாலம் கட்டப்பட இருக்கிறது. இது இருவழி பாதை மேம்பாலமாக கட்டப்பட உள்ளது. 3 இடங்களில் வாகன ஓட்டிகள் பாலத்தில் ஏறுவதற்கும், கீழே இறங்குவதற்கும் ஏற்ற வகையில் அமைக்கப்படும்.

குருநானக் கல்லூரி சந்திப்பு மற்றும் 5 பர்லாங் சாலை சந்திப்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் இந்த மேம்பாலம் அமைக்கப்படுகிறது. மொத்தம் ரூ.231 கோடியில் இந்த பாலம் கட்டப்பட உள்ளது. ஆகஸ்டு 22-ந்தேதி முதல் அடுத்த 30 நாட்களுக்கு டெண்டர் கோருபவர்கள் விண்ணப்பிக்கலாம். அதன்பின்னர், டெண்டர் இறுதி செய்யப்படும். மேம்பாலப் பணிகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கும். 2027-ம் ஆண்டு இறுதிக்குள் பாலப் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article