அனிச்சம்பாளையம்புதூரில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

1 month ago 4

பரமத்திவேலூர், டிச.13: பரமத்திவேலூரை அடுத்துள்ள அனிச்சம்பாளையம் புதூரில் விநாயகர், மகாமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, கடந்த செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு கணபதி வேள்வி, நவக்கிரக வேள்வி, மகா தீபாரதனை, மாலை 6 மணிக்கு விநாயகர் வழிபாடு, தீப வழிபாடு, வாஸ்து சாந்தி நடைபெற்றது. முன்னதாக, திரளான பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று அதிகாலை 4 மணிக்கு மேல், இரண்டாம் கால யாக வழிபாடு, நாடி சந்தானம், கலசம் புறப்பாடு நடைபெற்றது. காலை 7.30 மணிக்கு மேல் விநாயகர், மகாமாரியம்மன் கோயில் கோபுர கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதாம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

The post அனிச்சம்பாளையம்புதூரில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா appeared first on Dinakaran.

Read Entire Article