உசிலம்பட்டி அருகே உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர், தன்னிடம் தினமும் முத்தம் கொடுக்க சொல்லி டார்ச்சர் செய்வதாக 11 ஆம் வகுப்பு மாணவி தனது பெற்றோருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
11 ஆம் வகுப்பு மாணவியை மிரட்டி முத்தம் பெற்ற புகாருக்குள்ளானதால் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட எக்கனாமிக்ஸ் வாத்தியார் மூர்த்தி இவர் தான்..!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி 11 ஆம் வகுப்பு படிக்கின்ற மாணவி ஒருவர் அதே வகுப்பில் படிக்கின்ற மாணவனுடன் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது. இதனை பார்த்த ஆசிரியர் மூர்த்தி என்பவர் அந்த மாணவியின் புத்தக பையை சோதனை செய்து அதில் இருந்து மாணவர் கொடுத்த சில பரிசு பொருட்களை எடுத்து வைத்து மாணவியை மிரட்ட தொடங்கியதாக சொல்லப்படுகின்றது.
அந்த மாணவியை தினமும் தனது அறைக்கு தனியாக வரவழைத்து, “ காதலை வெளியே சொல்லி வாழ்க்கையை வீணாக்கி விடுவேன்” என்று மிரட்டி மாணவியிடம் கட்டாய முத்தம் பெற்றதாகவும், கண்ட இடங்களில் தொட்டதாகவும் கூறப்படுகின்றது. டார்ச்சர் செய்வதை ஆசிரியர் மூர்த்தி வாடிக்கையாக்கியதால் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு சென்றுள்ளார் மாணவி. தோழிகள் மூலம் மாணவியின் பெற்றொருக்கு இந்த விவரம் தெரியவந்த நிலையில் குடும்பத்தோடு உயிரை மாய்த்துக் கொள்ள சென்ற நிலையில் , மூதாட்டி ஒருவர் அவர்களை மீட்டு மதுரை பெண்கள் நலச் சங்கத்தினரிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகின்றது.
இதையடுத்து பெண்கள் நலச்சங்கத்தினர் அந்த மாணவியையும், பெற்றோரையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனர். அரசு பள்ளி ஆசிரியர் மீது புகார் அளிக்க மாணவி வந்திருக்கும் தகவல் அறிந்ததும் பஞ்சாயத்து தலைவர் ஒருவர் பெண்கள் சங்கத்தினரிடம் கட்டபஞ்சாயத்து பேசினார்
ஆசிரியர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பெண்கள் அமைப்பினர் விடாப்பிடியாக இருந்த நிலையில், சக மாணவிகளிடம் விசாரணை நடத்தியதில் உண்மை என்பது தெரியவந்ததால், கிராம கமிட்டி மூலம் பள்ளியில் நியமிக்கப்பட்டு 30 வருடங்களாக வேலை பார்த்து வந்த ஆசிரியர் மூர்த்தியை வீட்டுக்கு அனுப்பி விட்டதாக பள்ளி தலைமை ஆசிரியர் விளக்கம் அளித்தார்